Tuesday, March 30, 2010

சிலப்பதிகாரம்

சமிபத்தில் மிகவும் என்னை பாதித்த நிகழ்வு.
கடந்த வெள்ளி அன்று தள்ளு வண்டி வேர்கடலைகாரரிடம் வேர்கடலை வாங்கியபோது, உருகுலையாத ஒரு தமிழ் புத்தகத்திலிருந்து தாள்களை கிழித்து வேர்கடலை மடித்துத் தந்தார். ஏதோ ஒரு உந்துதலில், புத்தகத்தைப் பார்தேன். அது எதோ ஒரு நு லகத்திற்கு சொந்தமான சிலப்பதிகாரம் புத்தகம். கிழிந்ததுபோக, அரங்கேற்று காதையில் தொடங்கி காடுகாண் காதை வரையிலான பகுதி அவரிடம் கிழிபட்டுக்கொண்டிருந்தது. அப்புத்தகத்தை அவரிடம் கேட்டுப் பெற்றேன். அதற்காக அவரிடம் பணம் கொடுத்தேன். என் பதற்றத்தை கண்ட அந்த வேர்கடலை வண்டிகாரர், எனோ பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

என்னால் ஒரு வரி எழுதமுடியாது. ஆனால், நான் ரசித்த சில வரிகள் சில கிழே-

கானல் வரி (புகார் காண்டம்
பொழில் தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணிஇள வன முலையே
முழுமதி புரைமுகமே முரிபுரி வில்இணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே

திரைவிரி தருதுறையே திரும்ணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே

வளைவளர் தருதுறையே மணம்விரி தருமொழிலே
தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனையிடர் செய்தவையே

படித்தவுடன் மனது முழுக்க ஒரு சுகந்தம். இந்த பக்கமாவது கிழிப்படாமல் கிடைத்ததே.

நன்றி அந்த வேர்கடலை வண்டிக்காரருக்கு.

பெண்ணகரம்

பெண்ணகரத்தில் திமுக வெற்றி. ஆளும் கட்சிக்கு மீண்டும் வெற்றி. ஆளும் கட்சியின் சிறப்பான செயல் திட்டங்களினால் மட்டும் இந்த வெற்றி கிடைத்திடவில்லை. தேர்தலை எப்படி கையாளவேண்டும், எதிர்கொள்ளவேண்டும் போன்ற முத்தாய்பான உத்திகளால்தான் இந்த வெற்றி என்பதை யாராலும் மறுக்கமுடியாது.